அமெரிக்காவில் செக்கசிவந்த வானம் படத்திற்க்கு இரண்டாம் இடம்Second place CCV

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு , அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வியாழன் அன்று   மணிரத்னம் இய்க்கத்தில் வெளியான திரைப்படம் செக்கசிவந்த வானம். இப்படத்தை லைகா நிறுவனம் வெளகயீடு செய்தது. மணிரத்னத்தின் சொந்த நிறுவனமான  மெட்ராஸ்.டாக்கீஸ்இந்த படத்தை  தயாரித்துள்ளது.

மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான செக்கசிவந்த வானம் வெளியாகி ரசிகர்களகளிடமும், விமசரகர்களிடமும்   நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இப்படம் அமெரிக்காவில் வெளியாகி 542,000 டாலர்கள் வசூல் செய்துள்ளது  அமெரிக்காவில் வெளியான தமிழ் படங்களின் வசூலில் இரண்டாம் இடத்தை  பிடித்துள்ளது. காலா 1.88 மில்லியன் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் இரண்டாம் இடத்தில்இருந்த தானா சேர்ந்த கூட்டம்  441,000 டாலர் வசூல் செய்து  3வது இடத்தில் உள்ளது.முன்னணி நடிகர்கள் இருந்தும் அமெரிக்காவில்  செக்கசிவந்த வானம் படத்திற்க்கு  இரண்டாம் இடம் பெற்றுள்ளது .