அப்பாவானார் நடிகர் சதீஷ்! என்ன குழந்தை தெரியுமா? செம ஹேப்பியாக வாழ்த்தும் ரசிகர்கள்!

அப்பாவானார் நடிகர் சதீஷ்! என்ன குழந்தை தெரியுமா? செம ஹேப்பியாக வாழ்த்தும் ரசிகர்கள்!


sathish-blessed-with-gitl-baby

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஜெர்ரி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார் நடிகர் சதீஷ். அதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்

பின்னர் சதீஷ் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக அசத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சதீஷூக்கும் சிக்சர் பட இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த நடிகர் சதீஷின் மனைவிக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை மிகவும் மகிழ்ச்சியுடன் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குட்டி தேவதையை வரவேற்று ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.