அட.. இது மட்டும் போதுங்க! நாம கொரோனோவை ஜெயிச்சுடலாம்! செம ஸ்ட்ராங்காக நடிகை சமந்தா கொடுத்த டிப்ஸ்!!

அட.. இது மட்டும் போதுங்க! நாம கொரோனோவை ஜெயிச்சுடலாம்! செம ஸ்ட்ராங்காக நடிகை சமந்தா கொடுத்த டிப்ஸ்!!


samanatha-tips-to-escape-from-corono

நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவ துவங்கி நாளுக்கு நாள் அதிகரித்து பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் நாளொன்றுக்கு பல லட்சக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை சமந்தா கொரோனா பரவல் குறித்து கூறுகையில், நம்பிக்கை மற்றும் நேர்மறையான சிந்தனைகள் இரண்டும் போதும். எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் நம்மை காப்பாற்றும். தற்போது கொரோனா நம்மை சுற்றியுள்ளது. எங்கு பார்த்தாலும் கொரோனா பயத்தில்தான் அனைவரும் இருக்காங்க. இந்த நிலையில் அனைவருக்கும் அந்த கொடூர வைரஸை எதிர்த்து போராட முடியும் என்ற தைரியம் இருக்கணும்.

samantha

 கஷ்டம் வந்துருச்சேனு உயிரை விடுவது, கொரோனா வந்துவிட்டதென தற்கொலை செய்து கொள்வதெல்லாம் கூடாது. எப்போதும் தைரியத்தை இழக்க கூடாது. விரைவில் கொரோனா தடுப்பு மருந்து எல்லோருக்கும் கிடைக்கும். அதுவரை மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து எச்சரிக்கையாக இருந்தாலே போதும். நாம் கொரோனாவை ஜெயித்து விடலாம் என்று கூறியுள்ளார்.