என்னது! பிக்பாஸ் ரேஷ்மா மூன்றாம் திருமணம் செய்யவிருக்கிறாரா! மாப்பிள்ளை யார் தெரியுமா?Reshma third marriage

தமிழில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒரு சில படங்கள், நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார் ரேஷ்மா. அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த இன்ப, துன்பங்களை பற்றி கூறியிருந்தார்.

அதில் ரேஷ்மாவின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு ரேஷ்மாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரித்துள்ளனர். அதனை அடுத்து அமெரிக்கா சென்ற ரேஷ்மா அங்கு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Reshma

ஆனால் அவர் செய்த கொடுமையால் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து இந்தியா திரும்பினார். இந்நிலையில் தற்போது நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனை நிரூபிக்கும் வகையில் இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் உங்களை எப்போதும் சிரிக்க வைக்கும் மற்றும் அன்பு செலுத்துபவர்களை உணர்ந்து கொள்ளுங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.