சினிமா

மீண்டும் இளமையான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!

Summary:

release-of-2th-poster-of-petta-rajinikanth-who-returned

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நடித்து வரும் படம் பேட்ட. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் மேலும் சில பிரபலங்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா , சிம்ரன், மேகா ஆகாஷ், த்ரிஷா என முக்கியமான பிரபல நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.மேலும் இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார்  நடிக்க உள்ளார். இந்நிலையில்  ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது... 

இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


Advertisement