என்னது.. சோம் சேகருடன் காதலா?? முதன்முதலாக உண்மையை உடைத்த நடிகை ரம்யா பாண்டியன்!! என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா!!ramyapandian-talk-about-love-with-somsekar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் வெற்றிகரமாக ஜனவரி 17 முடிவுக்கு வந்தது. இதில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் ரம்யா பாண்டியன்.  அவர் அனைவருடனும் அன்பாகவும், நட்புடனும் பழகி வந்தார். 

இந்நிலையில் FREEZE டாஸ்க் மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யா பாண்டியனின் தம்பி மற்றொரு போட்டியாளரான சோம்சேகரை மச்சான் என அழைத்தார். அதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் ரம்யாவையும், சோமுவையும் இணைத்துப் பேச துவங்கினர். மேலும் பலரும் இருவரும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் எனவும் கருத்து கூறிவந்தனர். மேலும் சமீபத்தில் கூட ரம்யா மற்றும் சோம் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது.

ramya pandian

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் வந்த ரம்யாவிடம் ரசிகர் ஒருவர் சோம் குறித்து கேட்டதற்கு அவர், சோம்சேகர்  ஒரு நல்ல மனிதர்.  ஜென்டில்மேன். அனைவர் மேலும் அக்கறை கொண்டவர். அனைத்து டாஸ்க்குகளின் போதும் திறமையாக  செயல்பட்டார். மேலும்  நாங்கள் நல்ல நண்பர்கள். நான் மற்றவர்களுடன் எப்படி  நட்புடன் பழகினேனோ அப்படிதான் சோமுடனும் பழகினேன். மற்றபடி நீங்கள் நினைப்பது போன்று வேறு எதுவும் இல்லை என பதிலளித்துள்ளார்.