சினிமா

மிருகம் படத்தில் துணிச்சலாக நடித்த ஹீரோயின் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Summary:

pathmapriya-latest pic

தமிழில் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பத்மப்ரியா. இவர் பல மாடலின் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டிற்கான மிஸ் ஆந்திரா பிரதேஷ் என்ற அழகிய பட்டத்தையும் வென்றார்.

திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக பத்மபிரியா ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பத்மபிரியா இயக்கிய குறும்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இருப்பினும் அவரால் அந்த நிகழ்ச்சியில் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

padmapriya

தமிழில் இவர் இதுவரை தவமாய் தவமிருந்து, மிருகம் ,சத்தம் போடாதே, பட்டியல் ,பொக்கிஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் நடித்த தவமாய் தவமிருந்து என்ற படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்.

padampriya-latest

பத்மபிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார். சமீபத்தில் இவரது புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் இன்னும் இளமையாக இருக்கிறார் என கூறி வருகின்றனர்.


Advertisement