சினிமா

மோடி குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒற்றை மீமில் பதில் சொன்ன ஓவியா! அட..என்ன இப்படி சொல்லிட்டாரே!!

Summary:

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலம

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இந்தநிலையில் ஓவியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார்.

மேலும் அவருக்கு ஆர்மி உருவானது. இந்த நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான ஆரவ்வுடன் காதல் சர்ச்சையில் சிக்கி தற்கொலை முயற்சி செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு  அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அந்தளவிற்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை .

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்பொழுது ரசிகர் ஒருவர் மோடி அரசு பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டதற்கு ஓவியா ஒரு மீமை பதிலாக அளித்துள்ளார். அதில், என்ன பண்றது சார், எல்லாம் சிரிப்பா இருக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முன்பு ஏற்கனவே ஓவியா கோ பேக் மோடி என்ற பதிவை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement