தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
என்னது.. பிரியங்காவிற்கா?? விஜய் டிவி செய்த காரியத்தால் வச்சு செய்யும் நெட்டிசன்கள்! ஏன்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, தி வால், ஸ்டார்ட் மியூசிக் என எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. கலகலப்பாக, அனைவரும் ரசிக்கும் வகையில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த பிரியங்கா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் சில செயல்களால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார். இந்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த வருடத்திற்கான விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளினிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அவரது ரசிகர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் நெட்டிசன்கள் பலர் 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்து, பின் சில மாதங்கள் ஜாலியாக ஓய்வெடுத்த பின்பே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்துவரும் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளினி விருதா? அது எப்படி கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இதுகுறித்த மீம்ஸ் மற்றும் ட்ரோல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது