சினிமா

நயன்தாரா முதலில் இந்த முன்னணி நடிகரின் படத்தில் தான் நடிக்க இருந்தாராம்! எந்த படம் தெரியுமா?

Summary:

Nayanthara simbu thoittijaya

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகை நயன்தாரா முதன்முதலில் நடிகர் சரத்குமாருடன் இணைந்து ஐயா படத்தில் நடித்தது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் நயன்தாரா அதற்கு முன்பே நடிகர் சிம்புவுடன் இணைந்து தொட்டிஜெயா படத்தில் நடிக்க தான் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அந்த வாய்ப்பு தவற, ஐயா படத்தில் அறிமுகமானதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 


Advertisement