சினிமா

சிம்புவின் தொட்டிஜெயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் ஹீரோயினா?? இப்படி மிஸ் ஆகிருச்சே!!

Summary:

தமிழ் சினிமாவில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்திய

தமிழ் சினிமாவில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று, செம ஹிட்டான திரைப்படம் தொட்டி ஜெயா. இப்படத்தை துரை இயக்கினார். தொட்டி ஜெயா திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹீரோயினாக கோபிகா நடித்திருந்தார்.

 ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் நாயகியாக யாரை நடிக்கவைப்பது என ஆலோசனை மேற்கொண்டபோது தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாராவை நடிக்கவைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

ஆனால் இயக்குனர் துரை மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் இருவரும் இன்னொரு மலையாள நடிகையான கோபிகா இந்த படத்திற்கு கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளனர். பின்னர் ஹீரோயினாக கோபிகாவே நடித்துள்ளார். இந்த நிலையில் தொட்டி ஜெயா படத்தின் மூலம் நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாவது மிஸ் ஆனது என தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement