சினிமா

அந்த நடிகை வேண்டாம்! த்ரிஷாவை புக் பண்ணுங்க! பேட்ட படத்தில் நடந்த மாற்றம்!

Summary:

Meera mithun is the first choice for petta thrisha character

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. ஏற்கனவே படத்தின் பாடல், ட்ரைலர் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வரும் பொங்கலை முன்னிட்டு பேட்ட திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தில் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, சசி குமார் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பேட்ட படத்தில் முதலில் த்ரிஷாவிற்கு பதில் வேறொரு நடிகையைத்தான் தேர்வு செய்தார்களாம்.

அவர் வேறு யாரும் இல்லை தான சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த மீரா மிதுன் தானம். இவர் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. ஆனால் அடுத்த அடுத்த படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.

இந்நிலையில்தான் பேட்ட படத்தில், த்ரிஷா ரோலில் நடிக்க முதலில் மீரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக லுக் டெஸ்ட், ஸ்க்ரீன் டெஸ்ட் வரை சென்றுள்ளார். ஆனால் கடைசியில் ஏதோ காரணத்திற்காக நான் தேர்வு செய்யப்படவில்லை என்று புலம்பியுள்ளார் மீரா மிதுன்.


Advertisement