சினிமா

என்ன கொடுமை சார்! வீர தமிழச்சி ஜீலிக்கு வந்த சோதனை - வைரலாகும் வீடியோ.

Summary:

Latest video for juli

தமிழ் நாட்டில் ஏற்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறிமுகமானவர் ஜுலி. அதில் பிரபலமானதால் அவருக்கு பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறியதால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். பின்னர் ஜீலி என்றாலே யாருக்கும் பிடிக்காமல் போனது.

ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது ஒரு கல்லூரி விழாவிற்கு விருந்தினராக சென்றுள்ளார்.

அப்போது அவர் பேச ஆரம்பித்து முதல் மாணவர்கள் அவரை பேச விடாமல் ஓவியா ஓவியா என கத்த ஆரம்பித்து விட்டனர். அதற்கெல்லாம் அசராத ஜூலி ஒருத்தரை விமர்சிப்பது பெரிய விஷயம் இல்லை ஒருத்தரை போல் வாழ்ந்து காட்டுவது தான் பெரிய விஷயம் என்று துணிச்சலாக பேசி இருக்கிறார்.தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement