சர்ச்சைகளை கண்டு கொள்ளாமல் ஜாலியாக ஆயுதபூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படம்.?



Latest update about sivakarthikeyan

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி பின்பு தனது நடிப்பு திறமையின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார்.

Siva

சிவகார்த்திகேயன் முதன்முதலில் 'மெரினா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். மேலும் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டி இருக்கிறார்.

இதுபோன்ற நிலையில், சிவகார்த்திகேயன் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வருவதற்கு இசையமைப்பாளர் இமானும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனுடன் இனி எந்த ஜென்மத்திலும் சேரப்போவதில்லை என்றும், குழந்தைகளுக்காக தான் எதையும் வெளியே சொல்லாமல் இருக்கிறேன் என்றும் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Siva

இதற்குப் பலரும் பல விதமான கருத்துக்களை கூறிவந்த நிலையில், சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனை திட்டியும், ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் செய்தும் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் எதையும் கண்டுகொள்ளாமல் ஆயுத பூஜை கொண்டாடி வருகிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து அவரை திட்டி வருகின்றனர்.