எனக்கு நானே கொடுத்த தண்டனை! நடிகை வனிதாவால் மனமுடைந்து லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிரடி முடிவு! ஷாக்கான ரசிகர்கள்!

நடிகை வனிதாவால் மனமுடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இனி நடிக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.


lakshmi-ramakrishnan-releave-from-acting

தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் லட்சுமி இராமகிருஷ்ணன்.  இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.  இந்த நிகழ்ச்சியில் இவர் பல சங்கடங்களை சந்தித்திருந்தாலும் ஏராளமானோர் இதனால் பயனடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வனிதா, பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் மனிதர்களுக்கு இடையே ஏற்பட்ட உரையாடல் பெரும் வாக்குவாதமாக மாறி, வனிதா சிறிதும் மரியாதையின்றி லட்சுமி ராமகிருஷ்ணனை மோசமாக பேசினார். இதனால் அவர் மிகுந்த மனவருத்தம் அடைந்துள்ளார்.

Lakshmi ramakrishnan

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர் இதுகுறித்து கூறுகையில், சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது எனது குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் நான் நாம் சரியாக இருந்தால் எதுவும் தவறாக நடக்காது எனக் கூறி நடிக்க ஆரம்பித்தேன். மேலும் மக்கள் பிரச்சினைக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்.

இவ்வாறு அந்த நடிகையிடமும் பேசினேன். ஆனால், அவர்கள் என்னை எப்படியெல்லாம் பேசினார்கள் என்று அனைவரும் பார்த்திருப்பார்கள். ஒரு நடிகையே சக நடிகைகளை கீழ்த்தரமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.? அந்த நடிகை பேசிய அருவருப்பான வார்த்தைகளால் நடிகை என்று சொல்லிக் கொள்ளவே  வருத்தமாக உள்ளது. இந்த கசப்பான நிகழ்வால் நான் உடைந்து போய்விட்டேன். எனவே இனிமேல் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். இனி இயக்குனர் பணியை மட்டும் செய்ய உள்ளேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.