சினிமா

மறுபடியுமா? சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த புதிய முயற்சி! ஆனால் இந்தமுறை முற்றிலும் வித்தியாசம்!!

Summary:

lakshmi ramakrishnan new show in youtube

பிரபல தனியார் தொலைக்காட்சியில்  சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இந்த நிகழ்ச்சி மூலம்  வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்திக்கும் மனிதர்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு நேர்ந்த பிரச்சினைகளை சரிசெய்து வந்தனர். 

மேலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளித்து பல்வேறு துயரங்களை சந்தித்து வாழ்க்கையை வெறுத்தவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது இதனைத்தொடர்ந்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது.

தொடர்புடைய படம்

பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம்,  நெருங்கிவா முத்தமிடாதே,  அம்மணி,  ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் பல அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தும் வந்தார். 

 இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது தொலைக்காட்சியில் பாதியில் விட்ட சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொடரும் வகையில் தனியார் இணையதளம் ஒன்றில் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து தற்போது நடத்தி வருகிறார்.  மேலும் இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறுகையில் இந்நிகழ்ச்சி எனக்கு மனநிறைவை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி பங்கேற்பவரின் வாழ்க்கையை மாற்ற கூடியதாகவும் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.


Advertisement