சினிமா

பிரபல நடிகரின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் கும்கி பட நடிகை! உற்சாகத்தில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமிமேனன். அதனை தொடர்ந்து அவர் நடித்த கும்கி திரைப்படமும் பெருமளவில் வெற்றியடைந்தது 

 பின்னர் லட்சுமி மேனனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா,  மிருதன், வேதாளம் மற்றும் றெக்க போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் சினிமாவில் இருந்து சற்று விலகி பரதநாட்டியத்தில் ஆர்வம் காட்டி வந்தார்.

 

இந்த நிலையில் உடல் எடை குறைத்து சிக்கென மாறிய நடிகை லட்சுமிமேனன் மீண்டும் எப்பொழுது சினிமாவிற்கு வருவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில், லக்ஷ்மி மேனன் வசந்தபாலன் உதவியாளர் ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த  இந்தப்படத்தில்  ஹீரோவாக ஆரி நடிப்பதாகவும் கூறப்படுகிறது


Advertisement