தமிழகம் சினிமா

திருமணம் குறித்து முதன்முறையாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

Summary:

திருமணம் குறித்த பார்வை இப்போது எனக்கு மாறியுள்ளது என நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சர்க்கார் படத்திற்குப் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத அவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் சமீபத்தில் திருமணம் குறித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், இப்பெல்ல்லாம் திருமணம் குறித்து எண்ணம் எனக்கு மாறியுள்ளது. காரணம், இதற்கு முன்னர் திருமணம் செய்துக்கொள்வது பற்றி ஒரு விதமான யோசனை இருந்தது.

ஆனால், சமந்தா போன்ற நடிகைகள் சிலர் திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து பயணித்து கொண்டேதான் இருகிறார்கள். இப்படி சொல்வதால் நான் திருமணம் செய்து கொள்வதாக அர்த்தம் இல்லை. திருமணம் மீதான எண்ணம் எனக்கு மாற்றத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.


Advertisement