கையில் விலங்கு! மிரட்டலான பார்வை! பட்டையை கிளப்பும் க/பெ ரணசிங்கம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கையில் விலங்கு! மிரட்டலான பார்வை! பட்டையை கிளப்பும் க/பெ ரணசிங்கம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!


kape-ranasingam-firstlook-poster-released

தமிழ்சினிமாவில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கபெ ரணசிங்கம்.  இப்படம் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.  மேலும்  இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில்  மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கெளவர  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவர்களுடன் சமுத்திரக்கனி, பூ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்திற்கு பின்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை அறம் படத்துடன் ஒப்பிட்டு பேசி இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.

க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் 
இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனை கண்ட பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.