ரஜினியின் படத்தை லோகேஷ் இயக்கபோவதை குறித்து கமலின் அதிரடி பேச்சு..

ரஜினியின் படத்தை லோகேஷ் இயக்கபோவதை குறித்து கமலின் அதிரடி பேச்சு..


Kamal openup about rajinis next movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல். இவர் 80களின் ஆரம்பங்களிலிருந்து தற்போது வரை தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி வருகிறார்.

Lokesh

சில வருடங்களாக தொடர்ந்து இவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வியை தழுவி வந்தன. இதனையடுத்து கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து கமலின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

 மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தில் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

Lokesh

இதுகுறித்து கமலஹாசன், சைமா விருது வழங்கும் விழாவில் பேசினார். அவர் கூறியதாவது, "என்னுடைய ரசிகரான லோகேஷ் அடுத்ததாக ரஜினி திரைப்படத்தை இயக்கப் போவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அப்படம் வெற்றியடைய வேண்டும்" என்று பெருமிதமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.