சினிமா

வசூலை தெறிக்க விட்டது செக்க சிவந்த வானம் தானாம்!!!

Summary:

kaalaavirkku-aduththu-vasoolai-therikkavittathu-ccv

மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு உருவாகியிருக்கும் படம் "செக்கச் சிவந்த வானம்". லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.திரையரங்குகளில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம்

இந்தப் படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம்,  மல்டி ஸ்டாரர் படமான இப்படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹைதேரி, ஜெயசுதா, டயானா உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. காலாவிற்கு அடுத்து இந்த படம்தான் அதிக வசூல் செய்துள்ளதாம். காலா ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கடுத்து கடைக்குட்டி சிங்கம் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது.

செக்க சிவந்த வானம் கடைக்குட்டி சிங்கத்தை விட அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Advertisement