சிவா-ரஜினி படத்தில் இணைகிறார் மாஸான இசையமைப்பாளர் - ரசிகர்கள் உற்சாகம்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

சிவா-ரஜினி படத்தில் இணைகிறார் மாஸான இசையமைப்பாளர் - ரசிகர்கள் உற்சாகம்!

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். மும்பை போலீசாக ரஜினி நடிக்கும் இந்த படத்தினை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். 

மும்மையில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலை ஏற்படுத்தின.

இந்நிலையில் தற்போது ரஜினி அவர்கள் அடுத்து சிவாவுடன் இணைகிறார் என்று தகவல்கள் வந்துவிட்டது.மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி யுவன் ஷங்கர் ராஜா மட்டும் இணைந்தால் மாஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo