ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கு இப்படியொரு மாஸ் தலைப்பா! வெளியான புதிய அட்டகாசமான தகவல்!!jayam-ravi-next-movie-title

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்  ஜெயம் ரவி,  இவர் தனது அண்ணன் ராஜா இயக்கத்தில் உருவான  ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். 

அதனைத்தொடர்ந்து சன் ஆஃப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் , நிமிர்ந்து நில், பேராண்மை, தனி ஒருவன்,அடங்கமறு   போன்ற தரமான படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இதுவரை ஏராளமான சமூகநீதி நிறைந்த பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.மேலும் அவரது படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் அமையும்.  இதனால் இவருக்கென ஏரளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

Jayam ravi

மேலும் பிரதீப் ரங்கராஜன் இயக்கத்தில் சமீபத்தில் அவரது 24 வது படமான கோமாளி வெளிவந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட்கொடுத்தது. 

அதனை தொடர்ந்து ஜெயம் ரவி ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு சர்வாதிகாரி என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.