சினிமா

நள்ளிரவில் நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் வந்ததா? அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு விளக்கம்!

Summary:

மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகை சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது. ஆனால் இதற்கிடையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்ராவின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் அவரது புகைப்படங்கள்,வீடியோக்களை ரசிகர்கள் வைரலாக்கி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகை சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு அமைச்சர் ஒருவரது கார் வந்து சென்றுள்ளது. அது சிசிடிவி கேமராவில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது.

ஜெயக்குமார் பதில்

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பல விஷயங்களை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணை குறித்து கேட்டநிலையில்  அவர், மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்ல முடியாது. காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று தெரிவித்துள்ளார்


Advertisement