சினிமா

இந்த நடிகைக்கு 4 நிமிடத்திற்கு 2 கோடியாம்! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

Summary:

Jacqueline Fernandez for Bad Boy song in Prabhas Saaho

பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் எங்கையோ சென்றுவிட்டது என கூறலாம். இந்நிலையில் பாகுபலி படத்திற்கு பிறகு மிக அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட சகோ என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ்.

சகோ படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. சகோ படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இந்த படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பேட் பாய் என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாட்ஸுக்கு  படக்குழு 2 கோடி சம்பளம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 படக்குழு இந்த பாடலுக்கு ஜாக்குலினிடன் மிகவும் கவர்ச்சி காட்டி ஆடவேண்டும் என்று கேட்டுள்ளனர். இரண்டு கோடி சம்பளம் கொடுத்தால் ஓகே என அவர் சொல்ல தயாரிப்பாளரும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். வெறும் 4 நிமிடத்திற்கு 2 கோடியா என ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.


Advertisement