சினிமா

அட.. இது பிரபாஸ் பட தலைப்பாச்சே! ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் என்னனு தெரியுமா? ஆரம்பமான படப்பிடிப்பு!!

Summary:

அட.. ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் என்னனு தெரியுமா? பூஜையுடன் அட்டகாசமாக ஆரம்பமான படப்பிடிப்பு!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் இசையமைக்கும் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டாகும். இவரது பாடலுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். மேலும் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக களமிறங்கி அசத்தலாக நடித்தும் வருகிறார்.

அவரது கைவசம் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், 4 ஜி, ஜெயில், காதலிக்க நேரமில்லை, காதலியை தேடி நித்யானந்தா, பேச்சிலர், செல்பி என ஏராளமான படங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்மெண்ட் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்குகிறார்.

மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்திற்கு ரெபெல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் நிகேஷ் ஞானவேல்ராஜா, சி.வி.குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். ரெபெல் என்ற தலைப்பில் ஏற்கனவே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில்  படம் ஒன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Advertisement