சினிமா

என்னது.. பையா படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாராவா! பின் நடிக்க மறுக்க உண்மையான காரணம் என்ன தெரியுமா?

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவ

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் தற்போது ஒரு படத்திற்கு நான்கு முதல் ஐந்து கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு கார்த்திக் மற்றும் தமன்னா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பையா. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியிருந்தார். முழுவதும் டிராவலிங் நிறைந்த ரொமான்டிக் திரைப்படமான இதற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

Happy Birthday Nayanthara: As Nayanthara turns 32, films that made her  'Lady Superstar' | Entertainment News,The Indian Express

பையா திரைப்படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது நடிகை நயன்தாராவாம். இந்தப் படம் எடுக்கும் பொழுது நயன்தாரா நடித்த சில படங்களுக்கு குறைவாகத்தான் சம்பளம் பேசி இருந்தார்களாம். மேலும் இந்த படத்திற்கும் குறைவான சம்பளம் பேசப்பட்ட நிலையில் நயன்தாராவிற்கும், தயாரிப்பு குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை சுமூகமான முடிவிற்கு வரவில்லையாம். அதனால் நயன்தாரா பையா படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement