தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகை யார் தெரியுமா.?



First lovers in Tamil cinema industry is chinnappan and shakunthalam

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் திரைப்படங்களில் ஒன்றாக நடித்து பின் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அந்த வகையில் மிகவும் பிரபலமாக பேசப்படும் காதல் ஜோடிகள் என்றால் அது அஜித் - ஷாலினி மற்றும் சூர்யா - ஜோதிகா தான்.

ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பாக முதன் முதலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகை யார் என்றால் அது பி.யூ. சின்னப்பா மற்றும் சகுந்தலா தான். தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகராகவும், தயாரிப்பாளராக இருந்தவர் பி.யூ. சின்னப்பா.

Tamil cinema industry

பி.யூ. சின்னப்பா பிரிதிவிராஜன் என்ற படத்தில் நடித்த போது அவருக்கு ஜோடியாக நடித்தவர் சகுந்தலா. அப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதன்மூலம் தமிழ் சினிமாவில் முதல் காதல் ஜோடி என்ற பெயரை பி.யூ.சின்னப்பா - சகுந்தலா தம்பதியினர் பெறுகின்றனர்.