சினிமா

எல்லாம் பண திமிரு! மனைவி போட்ட பதிவால் அட்லீயை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

Summary:

Fans posting negative comments against to atlee

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த அட்லீ நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு மெகாஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ள அட்லீ பிகில் படத்தை இயக்கி வருகிறார். பிகில் படத்தில் பர்ஸ்ட் லுக் மட்டும் செகண்ட் லுக் போஸ்டர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. இந்நிலையில் அட்லீ அவரது தோழி ப்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ப்ரியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமானவர். இந்நிலையில் ப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ப்ரியா மட்டும் அட்லீ இருவரையும் சகட்டுமேனிக்கு திட்ட தொடங்கியுள்ளனர்.

அதற்கு காரணம், தனது வீட்டில் இருக்கும் நாய் குட்டி ஒன்றிற்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் ப்ரியா. சாப்பிட சாப்பாடு இல்லாமல் எத்தனையோ குழந்தைகள் வேதனைப்படும்போது நாய் குட்டிக்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா? இதெல்லாம் பண திமிரு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


 


Advertisement