சினிமா

திடீர் பக்கவாதத்தால் கை, கால் செயலிழந்து பரிதவித்துவரும் பிரபல தொகுப்பாளர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Famous anger logesh in serious condition

பிரபல நகைச்சுவை தொலைக்காட்சியான ஆதித்யா டிவியில் மொக்கை ஆப் தி டே என்ற நிகழ்ச்சியின் பிரபலமானவர் லோகேஷ் பாப். இவருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அதனைத்தொடர்ந்து லோகேஷ் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த  நானும் ரவுடி தான் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்நிலையில் லோகேஷ்க்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது செலவுக்கு 7லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதற்கு உதவி கோரியும் கலக்கப்போவது யாரு தொகுப்பாளர் திரு சரவணகுமார் பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement