தமிழகம் சினிமா

பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! சோகத்தில் மூழ்கிய தமிழ் சினிமாத்துறை..!

Summary:

famous actor died

பிரபல நடிகரும் , பாடகரும், இசையமைப்பாளருமான டி.எஸ் ராகவேந்திரா காலமானது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பிரபல தமிழ் நடிகரும், பாடகரும், இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா பல்வேறு படங்களில் குணசித்திர வேடமேற்று நடித்துள்ளார்.  வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.


 
இதனையடுத்து உயிர், படிக்காத பாடம், யாக சாலை ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் 75 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த செய்தியை நடிகர் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
 
அவரது இறுதி சடங்குகள் இன்று மதியம் 2 மணிக்கு சென்னை கே கே நகரில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர். இவரது மரண செய்தி தமிழ் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement