சினிமா

இன்று வெளியாகும் எங்கள் அண்ணன் வீடியோ பாடல் - இமான் வெளியிட்ட புதிய ட்வீட்!

Summary:

Engal annan video song release at 8pm in youtube

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அனு இமானுவேல் நாயகியாகவும், பரோட்டா சூரி வழக்கம்போல சிவாவின் நண்பனாகவும் நடித்துள்ளனர்.

இமான் இசையில் ”எங்கண்ணே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலின் முழு வீடியோ இன்று இரவு 8 மணிக்கு யூடியூபில் வெளியாக உள்ளது என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளியான படங்கள் ஏறத்தாழ எல்லாமே வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.


Advertisement