எதிர்நீச்சல் சீரியலிருந்து குணசேகரன் கதாபாத்திரம் நீக்கமா.? வெளியான புரோமோவால் அதிர்ச்சி.!

எதிர்நீச்சல் சீரியலிருந்து குணசேகரன் கதாபாத்திரம் நீக்கமா.? வெளியான புரோமோவால் அதிர்ச்சி.!


Edhirneechal serial update

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் "எதிர்நீச்சல்". இதில் ஆணாதிக்க மனப்பான்மையுள்ள குணசேகரன் கேரக்டரில், தனது மிரட்டலான நடிப்பால் கவர்ந்தார் மறைந்த நடிகர் மாரிமுத்து. நேற்றைய எபிசோடில், குணசேகரனைக் காணாமல் குடும்பமே கதறி அழுதது.

suntv

குணசேகரன் மனைவி ஈஸ்வரியிடம், அவரது மாமியார் விசாலாட்சி அம்மா ," உன் பிள்ளையை நீ கண்டிக்க மாட்டியா? பொய் ரெண்டு பேரும் பெரியவன் கிட்ட மன்னிப்பு கேளுங்க" என்று சொல்கிறார். ஈஸ்வரியும் சென்று பார்த்தால், குணசேகரன் அங்கு இல்லை.

வீட்டில் உள்ள எல்லா இடங்களிலும் தேடியும் குணசேகரனைக் காணவில்லை. போன் செய்து பார்த்தால், போன் மாடியில் தான் இருக்கிறது. அதற்கு அடியில் ஒரு லெட்டரும் இருந்தது. அதில், "என் கடமையை நான் முடித்துவிட்டேன். என் மனைவி, என் குழந்தை என்னை விட்டுச் சென்று விட்டனர்.

suntv

என் அம்மாவும் என்னை ஏமாற்றி விட்டார்" என்று எழுதியிருந்தார். பிறகு தெரிந்தவர்களுக்கு போன் செய்து விசாரித்தும் அனைவரும் அவர் இங்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். செய்து வருகின்றனர்.