காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
விநாயகர் சதுர்த்தி அன்று சிவாவின் சீமராஜா வெளியாகவில்லை என் தெரியுமா? காட்சிகள் நீக்கிய காரணத்தை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி?

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் விஜய்TV யின் மூலம் அறிமுகமாகி, படி படியாக பல இடத்தில் இருந்து உயர்ந்து தற்போது பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடித்தார் சிவகார்த்திகேயன்.
இவர் திருச்சியில் பிறந்தவர். திருச்சியில் பிறந்து தற்போது சினிமா துறையில் தனக்கென ஒரு மிக பெரிய இடத்தையும் பெயரையும் பெற்றுள்ளார். மேலும் இவருக்கென தமிழகத்தில் ஒரு மிக பெரிய தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது
மேலும் இவர் அடுத்தடுத்து தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான சீமராஜா என்னும் படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு தியேட்டர்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அதிகாலை காட்சிக்காக டிக்கெட்டுகள் அனைத்தும் முழுமையாக விற்கப்பட்டு தீர்ந்து விட்டது.
இந்த சூழ்நிலையில் ரசிகர்கள் அனைவரும் இன்று காலை தியேட்டருக்கு மிகவும் ஆவலுடன் சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்பு தொழிநுட்ப பிரச்சனையால் காலை காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்று கூறியவுடன் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதற்கு பின்பு தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே அடுத்து வரும் காட்சிகள் எந்த தடையும் இன்றி திரையிடப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.