பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராகக் கூறி விஷாலுக்கு சென்னை உயர்நீதி மன்றம் சம்மன்.?



Court order for vishal money cheating case

2004ம் ஆண்டு "செல்லமே" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி,  தாமிரபரணி, திமிரு ஆகிய ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஷால், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், இயக்குனராகவும் உள்ளார்.

Kollywood

தனது "விஷால் பிலிம் பாக்டரி"யின் மூலம் பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில், பிரபல முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 'லைக்கா', விஷால் தங்களுக்கு 21.29கோடி தரவேண்டும் எனவும், அதில் 15கோடியை நீதிமன்றத்தில் தரவேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தது.

இதுவரையில், அந்த 15 கோடியை விஷால் நீதிமன்றத்தில் செலுத்தாத காரணத்தால், சமீபத்தில் அவரது "மார்க் ஆண்டனி"படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தொடர்ந்து மேல்முறையீடு செய்து படத்தை வெளியிட்டார் விஷால்.

Kollywood

இந்நிலையில், வரும் 22ம் தேதி விஷால் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், 15கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், மறுத்தால் எதிர்காலத்தில் விஷால் படங்களில் நடிக்க முடியாதபடி தடை விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.