சினிமா

செம சர்ப்ரைஸ் இருக்கு! குக் வித் கோமாளியின் பிரமாண்ட இறுதி நிகழ்ச்சி எப்போ தெரியுமா? வவைரலாகும் வீடியோ!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இதன் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. போட்டியாளர்கள், கோமாளிகள் மட்டுமின்றி நடுவர்களும் ரகளைகள் செய்துவரும் இந்நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் செம ஜாலியாக சுவாரசியமாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையில் பைனல் படப்பிடிப்புகள் அண்மையில் நடைபெற்றதாகவும், அதில் கனி வெற்றியாளராகவும், ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஷ்வின் மூன்றாவது இடத்தையும் பெற்றதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த குக் வித் கோமாளியின் இறுதி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு மதியம் 2 மணி முதல்  ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டுள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement