சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
மக்களை நாய் என்று திட்டிய சாக்க்ஷி! மேடையில் வைத்து கமல் என்ன கேட்டார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் விளையாடிவருகின்றனர். இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒரு நபர் வெளியேற்றப்பட்ட உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினர்களாக வந்திருந்த சாக்க்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஷெரின் மற்றும் வனிதாவுக்கு இடையே நடந்த சண்டையில் தர்சன் உடனான உறவு குறித்து வனிதா பேசியதற்கு ஷெரின் கண்கலங்கி தன்னை பற்றி மக்கள் வெளியே என்ன நினைப்பார்கள் என கூறினார், இதற்கு மக்கள் என்ன நினைத்தாள் உனக்கு என்ன, மக்களை நாய்கள் என ஒப்பிடுவதுபோல அவர் பேசியிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதை அடுத்து இன்று வெளியே வந்த சாக்ஷியிடம் இதுகுறித்து மேடையில் கமல் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சாக்க் தன்னை வாழ வைத்த மக்களை தான் ஒருபோதும் அப்படி பேச மாட்டேன் என்றும் தான் ஆங்கிலத்தில் கூறியது தவறாக தமிழில் புரிந்திருக்கலாம் என சாக்க்ஷி கமலிடம் தெரிவித்தார்.