கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் உண்மைகளை பற்றி மனம் திறந்த பிக் பாஸ் போட்டியாளர்.. அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒரே வீட்டில் எவ்வளவு நாட்கள் இருக்கிறார்கள் என்பதே சவால்.
இவ்வாறு மக்களின் ஆதரவை பெற்று பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே சினிமா துறையில் ஜொலிக்கலாம் என்று பலர் கனவு கோட்டையில் மிதந்து வருகின்றனர்.
ஆனால் பிக் பாஸில் கலந்து கொண்ட போட்டியாளரான பாடகர் அனந்த் வைத்தியநாதன் பிக் பாஸை பற்றி உண்மையை தற்போது வெளிக்கொணர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது, "பிக் பாஸில் கலந்து கொண்டு எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தாலும், அது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வர வரைக்கும் மட்டுமே.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்னர் தங்களின் திறமையின் மூலமே சினிமா துறையில் நிலைத்து நிற்க முடியும். நம்முடைய உழைப்பும், திறமையும் இருந்தால் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற முடியும். பிக் பாஸ் நிகழ்ச்சி இதற்கு காரணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.