பிக்பாஸில் கலந்து கொள்ள போவதால் பாக்கியலட்சுமி சீரியல் இருந்து விலகிய பிரபல நடிகை..
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7ன் ப்ரோமோ வெளியானது. அதில் சீசன் 7ன் லோகோவை கமல் வெளியிட்டார். மேலும் இம்முறை ஒரு வீடு இல்லை, இரண்டு வீடு என்றும் ஒரு ட்விஸ்டை வைத்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், வரும் அக்டோபர் 8ஆம் தேதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வந்த ரித்திகா கலந்து கொள்ளப்போவதாகவும், இதற்காக தான் அவர் தொடரை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சீசனில், ரேகா நாயர், நடிகர் பப்லு, ரட்சிதாவின் கணவர் தினேஷ், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீசன் 6ன் வெற்றியாளராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.