சினிமா

பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது! நல்லா வளர்ந்து செம மாடர்னாக வேற லெவலில் இருக்காரே!!

Summary:

மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்ப

மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இப்படத்தில் மோகன் லால், மீனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திரிஷ்யம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. 

மேலும் திரிஷ்யம் திரைப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கானது. அதில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் அவர்களுக்கு மகள்களாக நிவேதா தாமஸ், எஸ்தர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் படைத்தது.

மேலும் சமீபத்தில் கூட த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி யில் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் பாபநாசம் படத்தில் கமலுக்கு இரண்டாவது பெண் பிள்ளையாக நடித்திருந்தவர் இளம் நடிகை எஸ்தர். அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தற்போது நன்கு வளர்ந்து செம மாடர்னாக உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.


Advertisement