சினிமா

பிரபல நடிகருக்கு கதை சொன்ன அட்லீ! கதையை கேட்டு அதிரடி முடிவை கூறிய நடிகர்!

Summary:

Atlee sharukan

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார் இயக்குனர் அட்லீ. இவர் முதலில் பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அட்லீயின் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.

ராஜா ராணி படத்தை அடுத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாபெரும் வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் அட்லீ அவர்கள் பாலிவுட் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. 

அதன் படி இயக்குனர் அட்லீ அவர்கள் பாலிவுட் சூப்பர் ஹுரோவான நடிகர் ஷாருக்கானிடம் கதையை கூறியுள்ளார். கதையை கேட்ட ஷாருக்கானுக்கு கதை பிடித்திருந்தாலும், கதையில் ஒரு சிலவற்றை மாற்றி அமைக்குமாறு அதிரடி முடிவை கூறி சென்றுள்ளார். 

இந்நிலையில் இயக்குனர் அட்லீ அவர்கள் பிரபல இயக்குனர் கரண் ஜோஹரில் கிரியேட்டிவ் குழுவுடன் இணைந்து கதையில் ஒரு சில விஷயங்களை மாற்றங்களை செய்து வருகின்றனர். எனவே விரைவில் இவர்களின் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 


Advertisement