ஏன் அஸ்வின் இப்படி பண்ணீங்க? உதயநிதி படத்திலிருந்து விலக இதுதான் காரணமா? உண்மையை போட்டுடைத்த அஸ்வின்!!

ஏன் அஸ்வின் இப்படி பண்ணீங்க? உதயநிதி படத்திலிருந்து விலக இதுதான் காரணமா? உண்மையை போட்டுடைத்த அஸ்வின்!!


aswin-explain-about-reason-why-releaving-from-udhayanid

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் பெருமளவில் இடம்பிடித்தவர் அஸ்வின். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி மற்றும் நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவரை அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபலமடைய வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

 இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் அஸ்வின்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் நடிக்கவிருந்ததாகவும், பின்னர் அதிலிருந்து திடீரென அவர் விலகிய நிலையில் அவருக்கு பதில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

aswinஇதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஸ்வின்,  எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவர்கள் அதை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டிருந்தனர். எனக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால்தான் நான் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.