கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
ஆருத்ரா மோசடி விவகாரம்: 7 மணிநேரம் தொடர்ந்த விசாரணை.. நடிகர் ஆர்.கே சுரேஷ் பரபரப்பு பேட்டி.!

ரூ.2438 கோடி ஆருத்ரா மோசடி தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக உட்பட பல அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்களும் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாஜக பிரமுகர் என பன்முகங்களை கொண்டவராக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆருத்ரா மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இவர் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில், டிசம்பர் 8-ம் தேதி சென்னை திரும்பினார். மேலும் நேற்று விசாரணைக்காக மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் நேரில் ஆஜர் ஆகினார். அவரிடம் காலை 11 மணி முதல் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
தனி அறையில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த விசாரணையில், அவரது வாக்குமூலங்கள் எழுத்து பூர்வமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்ட ஆர்.கே.சுரேஷ், "எனக்கும், ஆருத்ரா மோசடிக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறேன். நான் எதற்காக இவ்வளவு நாட்கள் வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளேன். இன்றும் விசாரணைக்கு வர அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். நான் கடந்த புத்தாண்டுக்காக துபாய் சென்றபோது அங்கு எனது மனைவிக்கு எதிர்பாராத விதமாக குழந்தையும் பிறந்து விட்டது.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் மாதம் ஒருமுறை சிகிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்துள்ளது. இதனால் நான் துபாயில் தங்கி இருந்தேன். தற்போது விசாரணைக்காக வந்துள்ளேன். என் மீது எந்த குற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.