செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள் செய்த அசத்தலான காரியம்! குவியும் பாராட்டுக்கள்!! வீடியோ..

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள் செய்த அசத்தலான காரியம்! குவியும் பாராட்டுக்கள்!! வீடியோ..


aradhana-sang-tamilthaai-vaalthu-song-in-chess-olympiad

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக நடைபெற்றது.

இதில் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9 நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நடைப்பெற்றது. அப்பொழுதும் பல அசரவைக்கும், அற்புதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா  தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆராதனா சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.