சினிமா

சினிமாவில் நடிப்பதை நிறுத்தியது ஏன்? உண்மையை போட்டுடைத்த நடிகர் அப்பாஸ்!!

Summary:

நடிகர் அப்பாஸ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியது ஏன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். அதைத் தொடர்ந்து அவர் சாக்லேட் பாயாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக சினிமாத்துறையில் வலம்வந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடித்து வந்த நிலையில் அப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. பெரும்பாலும் அவர் 2வது நாயகனாகவே நடித்துள்ளார். மேலும் நடிகர் அப்பாஸ் திருட்டுப்பயலே படத்தில் மோசமான  கதாபாத்திரத்தில்  வில்லனாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அப்பாஸ் அளித்த பேட்டியில், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதற்கான காரணம் குறித்து கேட்டதற்கு, அவர் தன்னை வியக்க வைக்கும் வகையில் எந்த கதையும் எனக்கு வரவில்லை எனவும், நாளுக்குநாள் நடிப்பது போர் அடித்துவிட்டது. அதனால் சினிமாவை விட்டு விலகி தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளேன் என கூறியுள்ளார்.


Advertisement