அடஅட.. வேற லெவல்யா! நடிகர் அல்லு அர்ஜுனுக்கு குவியும் பாராட்டுக்கள்! ஏன்? என்ன செய்துள்ளார் தெரியுமா??



allu-arjun-arrange-vaaccine-for-his-labours

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் துவங்கிய நிலையில் இந்தியாவிலும் பரவி கோரதாண்டவமாடியது. பின்னர் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும்  இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது.

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை தட்டுப்பாடு போன்றவையும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட கூறியும் தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்தப்பட்டும் வருகிறது.

allu arjun

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அண்மையில் மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது 45 வயது நிறைந்த தனது பணியாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தார்களுக்கும் தடுப்பூசி போட வலியுறுத்தி, அதற்கான ஏற்பாடுகளை தானே செய்துள்ளார். இவரது செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.