சினிமா

நடிகர் விஜய்யின் அந்த படத்தில் ஏன்தான் நடித்தேனோ? வருத்தத்தில் பிரபல நடிகை! யார்னு பார்த்தீர்களா!

Summary:

Akshara gowda talk about act in thuppaki movie

தமிழ் சினிமாவில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம் மற்றும் வித்யூத் ஜாம்வால்  உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. 2012-ம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் அக்‌ஷரா கவுடா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ஆரம்பம், இரும்பு குதிரை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அக்‌ஷரா பேட்டி ஒன்றில் கூறுகையில், துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதவிதமாக நடந்தது. அப்போது நான் மும்பையில் இருந்தேன். இந்த நிலையில் துப்பாக்கி படத்தில் காஜல் அகர்வால் தோழியாக நடிக்க என்னை அழைத்தனர். ஆனால் படத்தில் அப்படி இல்லை. அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக நான் மிகவும்  வருத்தப்படுகிறேன். துப்பாக்கி படத்தில் நடித்தபோது எனக்கு நடந்த நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்ததுதான் என்று கூறியுள்ளார்.


Advertisement