தல அஜித், தளபதி விஜய் ரசிகர்களை ஒன்று சேர்த்த மாஸ்டர்! ஒத்த வார்த்தையால் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் மாறியது!



Ajith, vijay fan happy for vijay speech

மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்தை போல உடையணிந்து வந்த நடிகர் விஜய் பேசுகையில், 'நண்பர் அஜித்போல ட்ரெஸ் பண்ணலாம்னு தான் கோட் சூட் போட்டு வந்தேன் என கூறியதால், தற்போது நண்பர் அஜித்  என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 

இசைவெளியீட்டு விழாவில் என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களுக்கு வணக்கம், என நடிகர் விஜய் பேச ஆரம்பித்தார். பொதுவாக விஜய், அஜித் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய போர் நடப்பது வழக்கம். ஆனால் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு, தல-தளபதி ரசிகர்களிடையே பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விதம் தான்.

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கோட்-சூட் அணிந்து வந்திருந்தார். அவர் அணிந்துவந்த உடை குறித்து பேசுகையில், நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலாம்னு தான் கோட் சூட் போட்டு வந்துருக்கிறேன் என நடிகர் விஜய் கூறினார். அவர் அவ்வாறு கூறிய அடுத்த நொடியே அரங்கமே அதிரும் அளவிற்கு சத்தம் கேட்டது.

அஜித்- விஜய் ரசிகர்களிடையே  பல சமயங்களில் கருத்து மோதல்கள் நடந்தநிலையில், தற்போது இருதரப்பு ரசிகர்களும் இந்த ஹேஷ்டாக்கில், அஜித் போல் உடையணிந்து வந்ததாக விஜய் கூறியது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.