இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
வலிமை படத்திற்காக 600 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றாரா அஜித்? வைரலாகும் புகைப்படம்.

வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்க இருக்கிறார் தல அஜித். இந்த படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
போலீஸ் கதாபாத்திரம் என்பதால் அஜித் தனது உடல் எடையை குறைத்து கதைக்கு ஏற்றாற்போல் மாற தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் வலிமை படத்திற்காக தல அஜித் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு 600 கிலோமீட்டர் சைக்கிளிலையே சென்றுள்ளார் என்று புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
இது உண்மையா? அஜித் 600 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றாரா என்று சோதித்து பார்த்தால் அது உண்மை இல்லை. இந்த புகைப்படம் வலிமை படம் குறித்து பேச்சு தொடங்குவற்கு முன்பே எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது அம்பலமாகியுள்ளது.