பயில்வான் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா கொடுத்த ஷாக் பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரே!!

பயில்வான் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு நடிகை ஐஸ்வர்யா கொடுத்த ஷாக் பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரே!!


Aishwarya answered about payilvan ranganathan question

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா. திரைப்பட நடிகை லட்சுமியின் மகளான இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்திலும், வில்லியாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர் நடிகைகளை மோசமாக விமர்சனம் செய்து பேசுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஐஸ்வர்யா, அது அவருடைய வேலை. ஒரு ரிப்போர்ட்டரா அவரோட வேலையை செய்கிறார். அவர் என்னவெல்லாம் செய்கிறாரோ? அது அவரது கர்மா.

Payilwan ranganathan

பொதுவாழ்க்கைக்குள் வந்துவிட்டால் நம்மளை பற்றி எப்படியும் பேசுவார்கள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு வரவேண்டும். அப்போதான் நிம்மதியாக இருக்க முடியும். ராமராஜன் சாருடைய ஒரு படத்தில் நான் நடித்தபோது பாவாடை தாவணி அணிந்து நகையெல்லாம் போட்டு ரொம்ப குடும்பபாங்காக இருந்தேன். நான் தலைகுனிந்து நடந்து சென்றபோது கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஐஸ் வரியா? என்று கேட்டார்.

ஒரு சாதாரண நடுத்தரக் குடும்ப பெண் சிம்பிளான புடவையணிந்து நகை போட்டு வந்தாலே மினுக்கிட்டு எங்க போறாளோ? என பேசுவது தான் இயல்பு. இதையெல்லாம் நாம் எடுத்துக் கொண்டால் நம்முடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.